பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கான்கிரீட் தடுப்புகள்...!

    -MMH

     பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரிவில் ரெயில்வே கேட் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி ரூ.45 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. 

மேலும் ரெயில்வே துறை மூலம் தண்டவாள பகுதியில் ரூ.5 கோடியில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த பணிக்கு 18 தூண்கள் அமைக்க வேண்டும். தற்போது அனைத்து தூண்களும் அமைக்கப்பட்டு விட்டன. 850 மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையுடன் மேம்பாலம் கட்டப்படுகிறது.

இதை தவிர 5½ மீட்டர் அகலத்தில் சர்வீஸ் ரோடு அமைக்கப் படுகிறது. இதற்கிடையில் பாலம் கட்டுமான பணிக்கு கான்கிரீட் தடுப்புகள் பாலக்காடு ரோட்டின் ஓரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. 

ஆனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் கான்கிரீட் தடுப்புகள் மீது ஒளிரும் ஸ்டிக்கர்களை ஓட்டவில்லை. எனவே வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- "ஒளிரும் ஸ்டிக்கர்கள் பாலம் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் கான்கீரிட் தடுப்புகள் அங்கேயே தயாரிக்கப்படுகிறது. இதற்கிடையில் ரோட்டோரத்தில் அவற்றை வைத்து உள்ளனர். இரவு நேரங்களில் அந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் கான்கிரீட் தடுப்புகள் இருப்பது தெரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கான்கிரீட் தடுப்புகள் மீது மோதி கீழே விழுந்து காயங்களுடன் தப்பித்து செல்லும் நிலை நீடித்து வருகிறது.

மேலும் நான்கு வழிச்சாலை பணிகளும் நடைபெறுவதால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். விபத்துகளை தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர்களை அந்த தடுப்புகள் மீது ஓட்ட வேண்டும். இல்லை என்றால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அவற்றை வேறு பகுதியில் வைக்க வேண்டும்." இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

- கிரி,ஈஷா .

Comments