இப்படியே போனா காங்கிரஸை இழுத்து மூட வேண்டியது தான் – மனம் நொந்து பேசிய ப.சிதம்பரம்!
ஒருகாலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட ஒரு கட்சி இன்று திமுகவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது என சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பழ. கருப்பையா கூறினார். இது எந்தளவுக்கு உண்மை என்பதே நிகழ்கால அரசியல் சம்பவங்கள் உணர்த்துகின்றன. மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து காங்கிரஸை கூட்டணிக்கு அழைத்துவருகிறது. ஆனால் காங்கிரஸோ மூன்றாம் அணிக்கு வாய்ப்பே இல்லை என தடாலடியாக மறுக்கிறது. காங்கிரஸுக்கு இது முக்கியவத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதால் எப்படியாவது திமுகவிடம் அதிக தொகுதிகளைப் பெற முயன்றுவருகிறது
தற்போது இதனை வெளிப்படுத்தும் விதமாகவே ப.சிதம்பரத்தின் பேச்சு அமைந்திருக்கிறது. அவர் பேசுகையில், “காங்கிரஸை அழிவில் இருந்து பாதுகாக்க இந்தத் தேர்தல் முக்கியமானது. தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் காங்கிரஸின் இடத்தைப் பிடித்துவிடும். அதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. நாம் எதிலும் தவறான யுக்தியை கையாளக் கூடாது.
காங்கிரஸின் தவறான யுக்திகளால் பாஜகவின் கைக்கு கர்நாடகம் சென்று விட்டது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் அகில இந்திய அளவில் முக்கியமான தேர்தலாகும். தமிழக காங்கிரசை அழிவில் இருந்து பாதுகாக்க இந்த தேர்தல் முக்கியமானது. எனவே காங்கிரசார் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். இன்று விட்டு விட்டால் பின் எப்போதும் பிடிக்க முடியாது. திமுகவுடன் கூட்டணி தேவை. மூன்றாம் அணியில் நம்பிக்கை இல்லை” என்று கூறியிருக்கிறார்.
நாளையவரலாறு செய்திக்காக,
-ஹனீப் தொண்டாமுத்தூர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.
Comments