கோவையில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்!!

     -MMH

கோவையில் 150 கிலோ கஞ்சா  பறிமுதல்!!

கருமத்தம்பட்டியில்  வீட்டில் பதுக்கிய 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்தாக, தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது . இதையடுத்து கருமத்தம்பட்டி இன்ஸ் பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள, ஒரு வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த, தலா இரண்டு கிலோ எடையுள்ள, 75 கஞ்சா பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, வீட்டில் இருந்த தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த நடராஜன், 60, அவரது மனைவி கலாவதி,58 ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து கேரள மாநிலத்துக்கு கடத்துவதற்காக கஞ்சா பதுக்கிவைத்தது கண்டுபிடிக்கப் பட்டது. இவர்கள் கேரளா கஞ்சா வியாபாரிகளுக்கு, விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிந்தது.

-அருண்குமார், கோவை மேற்கு.

Comments