கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை தொகுதிகளுக்கு பொது பார்வையாளர்களாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சீமா வியாஸ், கோவை வடக்கு தொகுதிக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சவுரவ் பகத், சிங்காநல்லூர் கிணத்துக்கடவு தொகுதிகளுக்கு உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வினோத் பிரசாத், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கோபால் மீனா, கோவை தெற்கு தொகுதிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேஷ் சிங் ராணா, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மிசோராம் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹிரிக்கேஷ் மொடக், மேட்டுப்பாளையம், சூலூர் தொகுதிகளுக்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுவரோசிஷா சோமவான்ஷி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments