அறிவியல் தினத்தை முன்னிட்டு,இரத்தினம் கல்லூரி வளாகத்தில் - PSLV ராக்கெட் முழு மாதிரி வடிவம் அமைப்பு!!
அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவை இரத்தினம் கல்லூரி வளாகத்தின் முன்பாக மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் விதமாக PSLV ராக்கெட் முழு மாதிரி வடிவம் அமைக்கப்பட்டது.
கோவை பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி ஒவ்வொரு வருடமும் அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் அறிவு திறனை ஊக்குவிக்கும் விதமாக அறிவியல் கண்காட்சி மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.இந்நிலையில் இந்த ஆண்டு அறிவியல் தினத்தை முன்னிட்டு,அறிவியல் வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் உள்ள இந்திய அரசின் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளமாக கல்லூரி வளாகத்தின் முன்பாக PSLV ராக்கெட் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முழு மாதிரி ராக்கெட் வடிவத்தின் துவக்க விழாவில் இந்திய விண்வெளி மையத்தின் முன்னால் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் ஏ செந்தில் செய்தியாளர்களிடம் பேசினார்:
அப்போது அவர்,இந்திய அரசின் அறிவியல் வளர்ச்சி தற்போது உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இருப்பதாகவும்,இதனை கல்வி பயிலும் மாணவ,மாணவிகளும் தெரிந்து கொள்ளும் வகையிலும்,மேலும் கல்வி கற்கும் போதே இது போன்ற மாதிரி ராக்கெட் வடிவங்கள் மாணவ,மாணவிகளின் அறிவியல் திறனை ஊக்குவிக்க உந்து சக்தியாக இருக்கும் என அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் மாணிக்கம் முதன்மை அதிகாரி நித்தியானந்தம் துணைவர் நாகராஜ் முதல்வர் முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-சீனி போத்தனூர்.
Comments