மஞ்சள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி!!
கோவையில் மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவையில் அதிக பரப்பில் மஞ்சள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில காலங்களாக விலை வீழ்ச்சி மற்றும் சிண்டிகேட் முறை உள்ளிட்டவைகளால், மஞ்சள் சாகுபடி பெருமளவில் சரிந்தது. இந்நிலையில். முட்டத்துவயல், செம்மேடு, வலையன் குட்டை உள்ளிட்ட பகுதிகளில், தற்போது மஞ்சள் சாகுபடியானது அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஏக்கருக்கு, 10 டன் வரை மகசூல் காணப்படுகிறது.அதே சமயம், ஏற்றுமதி உள்ளிட்டவற்றால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று, விவசாயிகளிடம் இருந்து, ஒரு குவிண்டால், ரூ.7,500 முதல், 8,000 வரை கொள்முதல் செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின், மஞ்சள் விலை ஏற்றம் கண்டுள்ளதாக, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
-அருண்குமார் கோவை மேற்கு.
Comments