வீட்டிலிருந்தவாறே வாக்காளர் அடையாள அட்டையை, திருத்த வேண்டுமா? ஐந்தே நிமிடங்கள் போதும்!

     -MMH
     நீங்களே உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வது எப்படி? இப்படித்தான்!

உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளதா? அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றனவா? ஏதேனும் திருத்தம் இருந்தால் என்ன செய்வீர்கள்?

நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே மிகச் சுலபமாக உங்களால் திருத்தம் செய்ய முடியும். இதற்கு செலவு எதுவும் செய்யத் தேவையில்லை. ஸ்மார்ட்போன், இல்லாவிட்டால் கம்ப்யூட்டர் போதும். இதற்கான வசதியை இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்குகிறது.

ஆன்லைன் மூலமாக வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

*இந்தியத் தேர்தல் ஆணையத்தின் https://www.nvsp.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் செல்லவும்.

*முகப்புப் பக்கத்தில் Login/Register என்பதை கிளிக் செய்ய வேண்டும். முதல் முறை பயனாளராக இருந்தால் Register as New user என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

*உங்களது மொபைல் நம்பர் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பதிவிடவும்.

*send OTP என்பதை கிளிக் செய்தால் உங்களது மொபைல் நம்பருக்கு OTP நம்பர் வரும். அதைப் பதிவிட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு பாஸ்வர்டு உருவாக்கவும்.

*இப்போது உங்களது அக்கவுண்ட் கிரியேட் ஆகிவிட்டது. உடனே லாகின் செய்து Correction in Personal Details என்பதை கிளிக் செய்யவும்.

*உங்களது மாநிலம், மாவட்டம், தொகுதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

*இப்போது உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்றவற்றை அப்டேட் செய்யலாம். இதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

*இதன் பின்னர் உங்களுக்கு ரெஃபரன்ஸ் நம்பர் வழங்கப்படும். அதை வைத்து உங்கள் கோரிக்கையின் நிலையை நீங்களே சரிபார்த்துக் கொள்ளலாம்.

- நாளைய வரலாறு செய்திகளுக்காக,

பாரூக்.

Comments