உரிமையாளரின் உயிரை பறித்த சண்டை சேவல்!!
தெலுங்கானாவில், சேவல் சண்டைக்கு தயார் படுத்தப்பட்ட சேவல் தாக்கியதில், அதன் உரிமை யாளர் உயிரிழந்தார். இங்குள்ள லோத்தன்னுார் கிராமத்தில், 16 பேர் அடங்கிய குழுவினர், சேவல் சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த சேவல் சண்டை நடந்தது. அதில் பங்கேற்ற சேவல் ஒன்றின் காலில், கூர்மையான கத்திகள் கட்டப்பட்டிருந்தன. போட்டிக்கு தயார்படுத்தப்பட்டபோது, அந்த சேவல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது.
அதை, உரிமையாளர் பிடிக்கவே, அந்த சேவல் தன் கால்களால், அவரை தாக்கியது. அப்போது, காலில் கட்டப்பட்டிருந்த கத்தி, அவரின் இடுப்பை பதம் பார்த்தது.படுகாயமடைந்த அவர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அதிக ரத்தம் வெளியேறியதால், அவர் உயிரிழந்தார்.உயிரிழந்த நபர், அந்த சேவல் சண்டையை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் என்பது தெரியவந்து உள்ளது. சட்டவிரோதமாக இந்த போட்டியை ஏற்பாடு செய்த மீதமுள்ள, 15 பேரை தேடும் பணிகளில், போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
-சுரேந்தர்.
Comments