யாரும் வாய்ப்பு தருவதில்லை! வடிவேலு வருத்தம்!
நகைச்சுவை நடிகர் வடிவேலு, சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, பட வாய்ப்பு கிடைக்காதது குறித்து உருக்கமாக பேசியுள்ளார். 'நடிக்க உடம்பில் தெம்பு இருந்தாலும், யாரும் வாய்ப்பு தருவதில்லை' என்று நடிகர் வடிவேலு கண்கலங்கியுள்ளார்.
தமிழ்த்திரையுலகின் காமெடி புயல், வைகைப்புயல் வடிவேலு. மிகவும் கடினமாக உழைத்து தனக்கென்று நகைச்சுவையில் தனி இடத்தை அடைந்தவர். புகழின் உச்சியில் இருந்தபோதே விஜயகாந்த் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, அவருக்கு எதிராக அரசியல் பரப்புரை செய்தார். ஆனால், அதுவே அவரது சரிவுக்குக் காரணமாக அமைந்தது.
மேலும், ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடந்துகொண்ட விதத்தால் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதனால் சினிமாவில் நடிக்க அவருக்குத் தடையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வடிவேலு அனைவருடனும் சந்தோசமாக ஆடிப்பாடி மகிழ்ந்தார். அப்போது பேசிய அவர், 'உங்களுக்கெல்லாம் ஒரு ஆண்டுதான் லாக்டவுன். நான் பத்து ஆண்டுகளாக அப்படித்தான் இருக்கிறேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு இருக்கிறது. ஆனால், யாரும் வாய்ப்பு தருவதில்லை' என்று கண் கலங்கினாராம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாரூக்.
Comments