திவான்சாபுதூர் கிராமத்தில்,திருக்கோயில்களில் நன்னீராட்டுப் பெருவிழா!!

-MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட திவான்சாபுதூர் கிராமத்தில் அருள்மிகு சக்தி விநாயகர், அருள்மிகு கன்னிமார், கருப்பராயன் சாமி உள்ளிட்ட திருக்கோயில்களில் திருநெறிய தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா  குறித்த நேரத்தில் இன்று பொள்ளாச்சி கிளை சிவசாந்தலிங்கர் அருட்பணி மன்றத்தினரால் நடத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியின் போது வானத்தில் கருட பகவான் வட்டமிட்டது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-M.சுரேஷ் குமார் கோவை தெற்கு.

 

Comments