டிக்டாக் மோசடியில் உச்சம் தொட்ட கார் ஓட்டுநர்! இத்தனை பெண்களா?
குடும்பப் பெண்களை பாதை மாற்றிக் கொண்டிருந்த டிக்டாக் செயலியை இந்திய அரசு தடை செய்துவிட்டாலும், அதனால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் ஆறாமல் உள்ளன. காதல் மன்னன் கண்ணன், ஆக்டிங் டிரைவர் உமர் ஷெரீப் வரிசையில் பல பெண்களை ஏமாற்றி பிளாக் மெயில் செய்து வந்தவர் ஊட்டி கார்த்திக். இவரும் டாக்சி டிரைவராக உள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பம் உள்ளது. இந்த நிலையில், புதைந்துபோன டிக்டாக் செயலியில் வீடியோக்களை பகிர்ந்து,
15 பெண்களுக்கும் மேலாக ஏமாற்றியவர் இந்த கார்த்திக். டிக்டாக்கில் கணக்கை தொடங்கிய இவர் தன்னுடைய வீடியோக்களுக்கு சில பெண்களிடம் நல்ல நல்ல கமெண்டுகள் வந்துள்ளன. இதனால் குஷியான கார்த்திக், அவர்களின் டிக்டாக் கணக்குகளுக்கு வேறொரு போலி கணக்கிலிருந்து மெசேஜ் அனுப்பி அவர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதை வாடிக்கையாக்கி வந்துள்ளார்.
அதன் மூலம் சில பெண்களிடம் தனக்கு திருமணமானதை மறைத்துவிட்டு காதல் வலை வீசியுள்ளார். அதில் சிக்கியவர்கள்தான் லதா, சுதா, வாணி, சுந்தரி, சனா, கவிதா, ரோஜா, அம்முராஜி, லைலா, விதித்தா உள்ளிட்டோர். இதில் திருமணமான பெண்களும் அடக்கம். டிக்டாக் மூலம் கார்த்திக்கை காதலிக்க தொடங்கிய பெண்களிடம் அவுட்டிங் செல்லும் கார்த்திக், திருமண வாக்குறுதிகளை கொடுத்து விடுவார். பின்னர் தனிப்பட்ட முறையில் இருக்கும்போது வீடியோக்களை எடுத்து வைத்துக்கொள்வார். கார்த்திக்கின் நடைமுறையில் பெண்களுக்கு சந்தேகம் ஏற்படும்போது அவர்களிடமிருந்து கார்த்திக் விலகிவிடுவார். பாதிக்கப்பட்ட பெண்கள் அதை தட்டிக்கேட்டால், வீடியோக்களை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவது இவரது வழக்கம்.
இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் இவரிடம் நியாயம் கேட்கும் செல்போன் உரையாடல்களை கேட்பதற்கே நெஞ்சை உலுக்குகிறது. சரியான வயதில் திருமணம் செய்துகொள்ள முடியாமல், குடும்ப பாரத்தை சுமந்துகொண்டு இருக்கும் பல 90' கிட்ஸ்கள் மத்தியில் ஏற்கனவே திருமணமாகியும் இத்தனை பெண்களை ஏமாற்றியுள்ள கார்த்திக்கை நினைக்கும் போது அவர்களின் மனம் வலிக்கத்தானே செய்யும். டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு, அதுபோல பல செயலிகள் தலை தூக்கியுள்ளன. அதில் ஒன்றுதான் 'டகாடகா'.
கார்த்திக் டகாடகா செயலிலும் ஒரு கணக்கை தொடங்கியதுதான் பாதிக்கப்பட்ட பெண்களை ஆத்திரமடைய செய்துள்ளது. ஆகையால் கார்த்திக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து டகாடகா செயலியில் கார்த்திக்கின் பெயரில் போலியான கணக்கை தொடங்கியுள்ளனர். அதில், கார்த்திக்கின் சுயரூபத்தை விளக்கி வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். அதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக், சுதா என்ற பெண்ணுக்கு போன் செய்துள்ளார். அந்த செல்போன் உரையாடலில் கெஞ்சும் கார்த்திக், ''எனக்கு நீ மட்டும் போதும்மா, வேற யாரும் வேணாம்மா. அந்த வீடியோக்களை தயவு செய்து அழித்துவிடு பிளீஸ்'' என கெஞ்சுகிறார்.
அதனைத் தொடர்ந்து சனா என்ற இளம்பெண்ணுடன் பேசும்போது, ''நீ எதற்கு பல பேருடன் பேசுற. ஹரிஷ் மற்றும் சந்தோஷ் உடன் பேசுற?" என்று பொறாமையில் பொங்கும் கார்த்திக்கை கடிந்துகொள்ளும் அந்தப் பெண், நீ என்னை சந்தேக படுகிறாயா? நீ அத்தனை பெண்களிடம் பேசுகிறாயே என்று கூறி தொடர்பை துண்டித்து விடுகிறார். இதுபோல ஐடி பெண்கள், அடகு கடை வியாபாரியின் மனைவி, புதிதாக திருமணமான பெண்கள் என பல பேரை ஏமாற்றிய கார்த்திக்கை கைது செய்ய வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பெண்கள். டிக்டாக் மோசடி மன்னன் கார்த்திக் கைது செய்யப்படுவாரா?
-ராயல் ஹமீது.
Comments