கண்டமான மின்கம்பம் அச்சத்தில் அந்த பகுதி மக்கள்..!!
கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஸ்ரீராம் நகர் ஐந்தாவது வீதியில் மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதை கண்டுகொள்ளாத மின்சார ஊழியர்கள் அலட்சியம் காட்டி வருவதால் விபத்து நேரிடும் என்று அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.இந்த கம்பம் பல்பொருள் அங்காடி அருகே உள்ளதால் அங்கு பொருள் வாங்க வரும் மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றன. இதை உடனடியாக கருத்தில் கொண்டு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈஷா, கிரி.
Comments