வாகன அழிப்பு கொள்கை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்!! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!!
இந்நிலையில் பழைய வாகன அழிப்பு கொள்கை பற்றிய அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர் " 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட வர்த்தக வாகனங்கள் மற்றும் 20 ஆண்டுகள் பழமையான தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் மாசு உமிழ்வு தரம் உள்ளிட்டவற்றை பரிசோதிக்க தகுதி சோதனை கட்டாயமாக்கப்பட உள்ளது. இந்த வாகனங்கள் தானியங்கி சோதனை மையங்களுக்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்படும்." என்று தெரிவித்தார்.
எனினும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழியப்பட்ட பழைய வாகன அழிப்பு கொள்கையின் விவரங்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.
இந்நிலையில் மத்திய அரசால் முன்மொழியப்பட்ட பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கையின் கீழ், புதிய வாகனங்களை வாங்குபவர்கள் தங்கள் பழைய மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை அகற்ற விரும்பினால், பல்வேறு நன்மைகளைப் பெறுவார்கள் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளர்.
இந்த கொள்கை அடுத்த ஆண்டுகளில் வாகனத் துறையின் வருவாய் ரூ.10 லட்சம் கோடியாக 30% அதிகரிக்கும் என்று கட்கரி கூறினார். இதுகுறித்து பேசிய அவர் "தங்கள் வாகனங்களை அகற்றுவதற்குச் செல்வோர் உற்பத்தியாளர்களிடமிருந்து சில நன்மைகளைப் பெறுவார்கள். உண்மையில், வாகன அழிப்பு கொள்கை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இது பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், வாகனத் துறைக்கு நன்மை செய்வதோடு மட்டுமல்லாமல் வாகன மாசுபாட்டையும் சரிசெய்யும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கொள்கையின் விவரங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என்றும், நாட்டின் மிகப் பெரிய முதலாளிகளில் ஒருவராக தொழில்துறைக்கு உதவும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
-சுரேந்தர்.
Comments