இன்னுமா நாம் சுற்றுச்சூழல் குறித்து கவலைக்கொள்ளாமல் இருக்கிறோம்?

 

-MMH

     இவ்வுலகம் BUTTERFLY EFFECTல் உட்பட்டது என்பார்கள் அறிஞர்கள் , அதாவது அமேரிக்காவில் உள்ள வண்ணத்துபூச்சி ஒன்றின் இறகு அசைவிற்கும் ஆஸ்திரேலியாவின் ஏற்படும்  நிலநடுக்கத்திற்கும் இடையே தொடர்புண்டு எனக்கூறுவதுதாம்  இந்த கூற்று .

உலகமயமாக்குதல் என்ற சித்தாந்தம் எப்போது படர்ந்தததோ அன்று முதல் உலகின் பல்வேறு நாடுகள் தங்களின் விலைமதிப்பில்லா காடுகளையும் , வளங்களையும் அழிப்பதென்பதும் , ஆலைகளிலும் , வாகனங்களிலும் ஏற்படும் கரியத்தின் வெளிப்பாடுகளும் , பல்வேறு நாடுகளின்  சுற்றுச்சூழலை மாசுபடுத்திடவே செய்கின்றது , வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டுவருகிறோம் எனக்கூறி நாளைய தலைமுறையினருக்கு கைமாற்ற வேண்டிய கடன்களான இயற்கை வளங்களை நாமே அழித்துவருவது நம்கண்களையே குருடாக்கி கண்ணாடி வாங்கிக்கொள்வதற்கு சமம்.

அந்தடிப்படையில் தற்போது இமயமலையில் உள்ள பனிபாறைகள் உருகிக்கொண்டு வருவதென்பது  உலக சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அச்சமடைய செய்திருக்கின்றது , உத்தரகாண்ட்டில் உள்ள இமயமலை பனிகளின் உருகுதல்  காரணமாக கடந்த 7ம் தேதி சமோலி மாவட்டத்தில் கங்கை ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது , இதன்  காரணமாக ரிஷி கங்கா அருகே உள்ள 'ரெய்னி' கிராமத்தில் செயற்கை ஏரி உருவாகி உள்ளது. இந்த ஏரியின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் நிலவி வருகின்றது. எனவே இச்செயற்கை ஏரியின் ஆழம், கொள்ளளவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது இதனை குறித்து அறிய கடற்படையினர் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றனர்.

மேலும்  இவ்வெள்ளப்பெருக்கினால்  சுமார் 200 பேர் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றனர், "தபோவன் சுரங்கத்தில்" பணியாற்றிக் கொண்டிருந்த பல தொழிலாளர்கள் அங்கே இடர்பாடுகளில் சிக்கியுள்ளனர் , அவர்களை மீட்கும் பணி கடந்த 15வது நாளாக தொடர்ந்துக்கொண்டிருக்கின்ற  இதுவரை  67 பேர் அங்கே மாண்டுபோயிருக்கின்றனர். இமயமலையின் அசாதாரண நிலையினைவ விவசாயிகளின் போராட்டத்தினைக் குறித்து மத்தியஅரசு கூறுவதுபோல இது  எங்கள் உள்ளாட்டு பிரச்சனை என்று அலட்டிக்கொள்ள முடியுமா? என்றால் முடியாது!! 

ஏனென்றால் இமயமலை மலை என்பது இந்தியாவின் வடபுற அரணாகும் , இதன் காரணமாக பல்வேறு இயற்கை பேரிடர்கள் நம்மை அணுகாமல் தடுக்கபடுகின்றது,மேலும் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய கேந்திரமாகவும் இமயமலை திகழ்கின்றது , மருத்துவ குணமிக்க மூலிகைகளும் , வற்றாத ஜீவ நதிகளையும் தன்னகத்தே உற்பத்தி ஸ்தலமாக கொண்டிருக்கின்றனது, இந்தியா மட்டுமன்றி சீனா , நேபாளம் , வங்கதேசம் போன்ற நாடுகளும் இமயத்தை சார்ந்து இருப்பதினால் அங்கே ஏற்படும் இடர்களுக்கு அனைவரும் பொறுப்பாளர்களாக மாறவேண்டிய நிலையிருக்கின்றது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கனியன் அவர்களின் சங்கப்பாடலுக்கேற்ப , எல்லைகளால் பிரிந்திருந்தாலும்  ஊர் என்பது ஒன்றே ! அதனை பேணுவது தான் நன்றே!!

 -நவாஸ்.

Comments