வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனை!! - மூன்று டன் ரேஷன் அரிசி மடக்கி பிடிப்பு!!

     -MMH

     பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த பெரியபோது பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரி முருகராஜ், ஆனைமலை வருவாய் ஆய்வாளர் செல்லத்துரை தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது அந்த வழியாக வந்த கடல் புறா என்ற பெயர் கொண்ட  TN 39 H 5576 பதிவு எண் கொண்ட டெம்போவை நிறுத்த முயற்சி செய்தனர். நிற்காமல் சென்ற வாகனத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை சோதனை செய்ததில் மூன்று டன் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர், மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments