வால்பாறை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்!!

     -MMH
    பொள்ளாச்சி வால்பாறை நகரின் சில கடைகளிலும், எஸ்டேட் பகுதியில் உள்ள சில கடைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிக அளவில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக வால்பாறைக்கு  சுற்றுலா வரும் பயணிகளுக்கு கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வழங்குகின்றனர். பொருட்களை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் பைகளை எங்கு வேண்டுமானாலும் வீசி சென்று விடுகின்றனர். இதனால்  இப்பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் பிளாஸ்டிக் பைகளை உட்கொள்ளும் பொழுது உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடுகிறது.  இதுகுறித்து வால்பாறை நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கையாக முன் வைக்கின்றனர். 

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments