கோவை காவல் ஆணையரிடம் த.மு.மு.க.மனு! சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டி..!!

 

-MMH 

சமூக நல்லிணக்கத்தை  சீர்கெடுத்து வன்முறையைத் தூண்ட நினைக்கும் கயவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்.

கடந்த 31.01.2021 அன்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் உலக இஸ்லாமியர்கள் புனிதமாகக் கருதக்கூடிய நபிகள் நாயகத்தை மிக தரக்குறைவாக விமர்சித்து இஸ்லாமியர்கள் மனது புண்படும்படி பேசியுள்ளார். இதுபோன்ற வன்ம பேச்சுக்கள் இவர் தொடர்ந்து பேசுவதால் தமிழகத்தில் கலவரம் ஏற்படும் சூழல் உருவாகிறது.

ஆகவே, இதுபோல் யாரும் பேசாமல் இருக்க வேண்டும் என்றால் இவ்வாறு  பேசிய கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். என்று அந்த மனுவில் கூறப்பட்டுருந்தது.

தகவல்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை வடக்கு மாவட்டம் செயலாளர்,K.U. முஜிபுர் ரஹ்மான்.

-சீனி போத்தனூர்.

Comments