திமுகவினர் திருப்புத்தூரில் நடனமாடி பிரச்சாரம்!
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அண்ணா சிலை மற்றும் காந்தி சிலை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் "ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போறாரு" என்ற பாடலுக்கு திமுகவினர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கதிர். ராஜ்குமார் குழுவினரோடு நடனமாடி துண்டு பிரசுரம் வினியோகித்து பிரச்சாரம் செய்தனர்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் ரெ.கார்த்திகேயன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழ்நம்பி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சோமசுந்தரம், நகர இளைஞரணி அமைப்பாளர் பசீர் அகமது, பழக்கடை அஜிஸ், துணை அமைப்பாளர் மனோகரன் தகவல் தொழில்நுட்ப அணி காளிமுத்து, அரிஹரசுதன், சுண்ணாம்பிருப்பு ஜெகன், பிள்ளையார்பட்டி சதிஸ்குமார், நகர அவைத்தலைவர் ராம.ரவி, நகர இளைஞரணி முத்துக்குமார், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட பிரதிநிதி ஷாஜகான், பாரத், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திமுக மாவட்ட செயலாளரும், திருப்பத்துர் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஆர்.பெரியகருப்பன் அறிவுறுத்தலின்படி இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
-அப்துல் சலாம், திருப்பத்துர்.
Comments