மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! மக்கள் நலப்பணியாளர் தற்கொலை முயற்சி!
கடந்த 23 நாட்களாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேலைகேட்டு மக்கள் நலப்பணியாளர்கள் தொடர் தர்ணா போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இதுவரை கண்டுகொள்ளாத அரசிடம், வாழ்வாதராம் வேண்டிக் கொண்டிருக்கும் மக்கள் நலப் பணியாளர்களில் ஒருவர், மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் ஒரு மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றுகொண்டிருக்கிறார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பணி வழங்கவும், தவறினால் தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது ஒவ்வொரு ஊரிலும் அவரது வாகனத்தில் விழுந்து மக்கள் நலப் பணியாளர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் எனவும் கூறிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலைக்கு முயன்று கொண்டிருக்கும் அந்த மக்கள் நலப்பணியாளரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-பாரூக், சிவகங்கை.
Comments