மூதாட்டியிடம் செயின் பறிப்பு - போலீசார் விசாரணை!!!

     -MMH
     கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னப்பன், இவரது மனைவி மாணிக்கம் (65). இவர் நேற்று மாலை வீட்டி வாசலில் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது அங்கு ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மூதாட்டியிடம் அட்ரஸ் கேட்பது போல் பேசியுள்ளனர். அப்போது திடிரென மாணிக்கம் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மூதாட்டியின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் தப்பிய மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் மாயமாகினர். சம்பவம் தொடர்பாகக் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments