சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி சாலையைக் கடந்து ரயில்வே பாதை அருகே நின்றது!! - அதிர்ஷ்டவசமாக விபத்து ஏதும் நடக்கவில்லை!!
தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் வழித்தடத்தில் TN 34 J 0086 பதிவு எண் கொண்ட லாரி திவான்சாபுதூர் ரயில்வே கேட் வே பிரிட்ஜ் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலையைக் கடந்து ரயில்வே பாதை அருகில் நின்றது.
அதிர்ஷ்டவசமாக எதிரே வாகனங்கள் எதுவும் வராததால் விபத்து ஏதும் நடக்கவில்லை இதைப்பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி சென்று பார்த்த பொழுது ஓட்டுனர் கடும் போதையில் இருந்துள்ளார் இதைக் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் ரோட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கின்றது.
அதில் ஒரு ஓட்டுநர் தவறு செய்துவிட்டு வாகனத்தை இயக்கினால் எத்தனை பேருக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைக்கும் பொழுது ரோட்டில் செல்வதற்கு பயமாக உள்ளது என்கிறார். கூட்டத்தில் இருந்த ஒருவர் மேலும் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும் பொழுது குடிக்காமல் இருந்தால் அவர்களது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது என்கிறார். மேலும் ஒருவர் கூறுகையில் மதுபானக் கடைகளில் வயது வரம்பின்றி அனைவருக்கும் மதுபானங்கள் எளிமையாக கிடைக்கிறது , மேலும் பெரும்பாலானோர் தன் வேலை நேரங்களில் மது அருந்திவிட்டு வேலையை செய்கின்றனர், இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது, இதை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்கிறார்.
-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.
Comments