கோவை நேஷனல் மாடல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் இந்தியா டாய் ஃபேர் 2021 எனும் பொம்மை கண்காட்சி நடைபெற்றது!
சுதேசிய கைவினைப் பொருட்கள் மற்றும் பொம்மை பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்தியாவில் முதன் முறையாக இந்திய பொம்மை கண்காட்சி -2021 ' எனும் மாபெரும் கண்காட்சியை பிரதமர் மோடி இணையவழியாக துவக்கி வைத்திருந்தார்.இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 56 பள்ளிகளில் தமிழகத்தில் இருந்து கோவை நேஷனல் மாடல் சி.பி.எஸ்.இ.பள்ளி பொம்மை கண்காட்சியை நடத்த தேர்வாகி உள்ளது.
இந்நிலையில் பள்ளியின் நிர்வாகிகள் உமா மோகன்,மற்றும் தாளாளர் மோகன் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி பள்ளி வளாகத்தில் டாய் ஃபேர் 2021 பொம்மை கண்காட்சி நடைபெற்றது.நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில், தமிழ் கலாச்சாரம்,மொழி,இந்திய பண்பாடு நாகரீகங்களை பறை சாற்றும் விதமாக தத்ரூபமாக உருவாக்கப்பட்ட பொம்மைகள்,மற்றும்,இயற்கையான பொருட்களை கொண்டும்,பயன்படுத்தப்பட்ட துணிகள்,போன்ற பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொம்மைகள்,தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, பரம்பதம் போன்ற பொம்மைகள் மற்றும் இந்திய போர்க்கப்பல்கள் போன்று உருவாக்கிய பொம்மைகள் காட்சி படுத்தப்பட்டிருந்தன.
கண்காட்சியை ஒருங்கிணைத்த பள்ளி முதல்வர் கீதா லஷ்மண் செய்தியாளர்களிடம் கூறுகையில், . இந்தியாவில் பொம்மைக் காட்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 56 பள்ளிகளில் நேசனல் மாடல் பள்ளியும் ஒன்று என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது .
கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கி ஊக்குவிக்கும் நோக்கில் பொம்மை மற்றும் கைவினை பொருள் உருவாக்குதல் என்ற கற்பித்தல் செயற்பாடு நீண்ட காலமாகவே பாடத்துடன் இணைத்து இப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்,குறிப்பாக கடந்த 2011 ஆண்டு முதல் பள்ளியில் பொம்மை ( Toy Library ) நூலகத்திலிருந்து கற்றல் சாதனங்களை இரவல் பெற்றுச்சென்று விளையாட்டின் மூலம் கற்றுக்கொள்ளும் வழக்கம் கடந்த பத்து வருடங்களாக நடைமுறையில் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.முன்னதாக கண்காட்சி துவக்க விழாவில் நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் பேபி,மற்றும் கோத்தகிரி பள்ளி முதல்வர் பானுமதி உட்பட ஆசிரியைகள் ,மாணவ,மாணவுகள் என பலர் கலந்து கொண்டனர்.
- சீனி,போத்தனூர்.
Comments