சிங்கம்புணரியில் 150 வருட பழமையான புளியமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது!!
திண்டுக்கல் - தேவகோட்டை சாலை ஏற்கனவே மாநில நெடுஞ்சாலையாக இருந்து வந்த நிலையில், தற்போது இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு, சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக சாலையோர மரங்களை அகற்றும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக சிங்கம்புணரி நகர்ப்பகுதியில், ராயல் எலெக்ட்ரானிக்ஸ் முன்பாக இருந்த 150 வருடங்கள் பழமையான ஒரே புளியமரம் இன்று காலை அகற்றப்பட்டது.
மிகப் பழமை வாய்ந்த மரமாக இருந்ததால் மரத்தின் உள் பகுதி எலும்புக்கூடாக காட்சி அளித்தது. அதன் உள்பகுதியிலிருந்து ஏராளமான ராட்சத பள்ளிகள் வெளியேறி அருகிலிருந்த கடைகளுக்குள் புகுந்தன.
- ராயல் ஹமீது & அப்துல்சலாம்.
Comments