பிப்ரவரி 14 என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது காதலர் தினம்! ஆனால்.?

-MMH

     ளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடக்கூடிய தினமாக இன்றைய தினம் அமைந்துள்ளது  என்றால் அது மிகையல்ல இதையும் தாண்டி இன்றைய பிப்ரவரி 14ம் தேதி கடந்த ஆண்டுகளில்  மனதை வருடிய முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம், 

1989 சாத்தானின் கவிதைகள் என்ற நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ரூகொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார். 

1990 பெங்களூரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 92 பேர் உயிரிழந்தனர் 54 பேர் காயங்களுடன் தப்பினர். 

1998 கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர் 250 பேர் காயமுற்றனர். 

2019 காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது என்னும் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments