பறவைக்காய்ச்சல் பறவாமல் நடவடிக்கை!
பொள்ளாச்சி ஆனைமலையைச்சேர்ந்தவர் முகமது ஆதம், 34, பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில், இறைச்சிக்கடை நடத்துகிறார். கடையில் உள்ள கோழிகள் இறந்து, கடும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள், வருவாய்த்துறைக்கு தகவல் கொடுத்தனர். வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி சுகாதார அதிகாரிகள், சம்பவ இடத்துக்குச்சென்று விசாரித்தனர். அதிகாரிகள் கூறியதாவது:
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், சில கடைகள் திறக்கப்படுகின்றன. மற்ற நாட்களில், கோழிகளுக்கு தீவனம், தண்ணீர் கொடுக்காமல் பூட்டிச் செல்கின்றனர். இதனால், கோழிகள் உணவின்றி இறக்கின்றன.இக்கடையில், கடும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள், வருவாய்த்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
கடையில், 15 இறந்த கோழிகள், 10 நோய் வந்த கோழிகளை பறிமுதல் செய்து, முறையாக கிருமிநாசினி தெளித்து அப்புறப்படுத்தப்பட்டது.கடை உரிமையாளர் முகமது ஆதமுக்கு அறிவுரை வழங்கி, எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பறவைக்காய்ச்சல் பறவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது." இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.
Comments