போக்சோவில் எஸ்பி அலுவலக ஊழியர்! காரைக்குடியில் அவலம்!

      -MMH

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல்துறை அலுவலர் கைது!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (40). இவர் மதுரை எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். பாலாஜியின் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உறவினர்கள் என்பதால் அங்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமியின் வீட்டிற்கு பாலாஜி சென்றார். அவரைப் பார்த்ததும் பயத்தில் சிறுமி வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டாள். இதை பார்த்த பெற்றோர் சிறுமியை அழைத்து விசாரித்த போது தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சிறுமி கண்ணீருடன் கூறி இருக்கிறாள். 

இது குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி அருண், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தேவகி ஆகியோர் விசாரணை நடத்தி பாலாஜியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ராயல் ஹமீது.

Comments