சிங்கம்புணரி அருகே அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன..!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள முறையூரில் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. சிங்கம்புணரி ஒன்றியக் குழு தலைவர் திருமதி. திவ்யா பிரபு அவர்கள் சைக்கிள்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்கள்.
ஒன்றிய கவுன்சிலர் C.சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் வரவேற்புரையாற்றினார். தேசிய நல்லாசிரியர் சக்திவேல் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் தலைமையாசிரியர்கள் சொக்கலிங்கம் மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மேலும், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எஸ்.திருவாசகம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆர்.பிரபு, முறையூர் கூட்டுறவு சங்கத் தலைவர் சாமியாடி செல்வம், கரு.கோபால சொக்கப்பன் அம்பலம்,
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், பெரிய சாமியாடி சொக்கநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சதாசிவம், தொழிலதிபர் பொன்.குணசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாஸ்கரன்,
முன்னாள் விஏஓ.மணிவண்ணன், அதிமுக நிர்வாகிகள் ரவிச்சந்திரன், அழகு சேகரன், கரு.ஜோதிமணி மற்றும் பெற்றோர்களும் பொதுமக்களும், அதிமுக நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விலையில்லா சைக்கிள்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
-பாருக், சிவகங்கை.
Comments