பொன்னமராவதியில் மருத்துவர் சமூக நலச்சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது!!

-MMH

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அருகே உள்ள அழகியநாச்சியம்மன் கோவில் திடலில் மருத்துவர் சமூக நல கூட்டமைப்பு சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு பொன்னமராவதி நகரத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். 

புதுக்கோட்டை மாவட்ட தலைவர் கணபதி மாநில அமைப்பு செயலாளர்கள் கண்ணன், முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்னர். மாவட்ட செயலாளர் ஆனந்தன், புதுக்கோட்டை நகர தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

 -M.சதாம் உசேன்.

Comments