ராகுல்காந்தியை வியக்க வைத்த காளான் பிரியாணி!! ருசித்து ரசித்து சாப்பிட வீடியோ வைரல்!!

 

    -MMH

தமிழகத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வந்த ராகுல் காந்தி கரூர் புதுக்கோட்டை மாவட்டங்களில் தேர்தல்  கலந்தாய்வு கூட்டம்  நடத்தி இருக்கிறார். 

அப்பொழுது அவரது விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த கரூர் எம்பி ஜோதிமணி அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற  பிரபலமான யூடியூப் சேனல் நடத்தி வரும்  குழுவினரை ரகசியமாக சந்திக்க ஏற்பாடு செய்து அவர்கள் செய்த பிரியாணியை ராகுல் காந்தியை சாப்பிட வைத்து அவர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.  


கரூர் எம்பி ஜோதிமணி அவர்கள் அரவக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் ராகுல்காந்திக்காக மணக்க மணக்க காளான் பிரியாணி சமைத்து பரிமாற ஏற்பாடு செய்திருந்தார் . அந்த தோட்டத்திற்கு மிக ரகசியமாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வந்திருந்தனர். 

ராகுல்காந்தி அந்தக் குழுவினரை வணக்கம் என்று தமிழில் கூறி வாழ்த்து தெரிவித்தார். அவர்கள்  யூ ட்யூப் சேனல் பற்றியும் அதை தான் பார்த்ததாகவும் தெரிவித்த அவர் அவர்கள் பிரியாணி சமைப்பதை பார்க்க விரும்புவதாகவும் அதற்கு தான் உதவி செய்வதாகவும் கூறினார். பின்னர் அவரே தயிர் பச்சடி தயார் செய்தார். 

பிரியாணி தயாரானவுடன் அனைவரும் ஓலைப் பாயில் அமர்ந்து சாப்பிட்டனர். பின்னர் அவர்களது  விருப்பம் என்னவென்று கேட்டு அவர்கள் தாங்கள் வெளிநாட்டில் சமைக்க விரும்புவதாகவும் அதற்கு ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டனர்.


உடனே ராகுல் காந்தி அவர்கள் தனது  அமெரிக்காவிலுள்ள நண்பரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பை  அமெரிக்காவில்  உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.  இந்த வீடியோ யூ டியூபில் வைரல் ஆகி 41  லட்சத்திற்கும் மேலானோர் எதிர்பார்த்துள்ளனர் .

இந்த ரகசிய சந்திப்பு கரூர் எம்பியின் மேற்பார்வையில் நடந்துள்ளது. ராகுல் காந்தியின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

நாளையவரலாறு செய்திக்காக,

-V. ராஜசேகரன்,தஞ்சாவூர்.

Comments