பிஜேபியின் ஆபாசஅரசியலின் விளைவு இது.! - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆவேசம்!!!
கனிமொழி எம்.பியை தரம்தாழ்ந்து விமர்சித்துள்ள பிஜேபியின் கோபாலகிருஷ்ணன் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பெண்களை அறிவுசார்ந்து அணுகாமல் படுக்கையறையோடு மட்டுமே தொடர்புபடுத்தி பார்க்கும் இழிபிறவிகளை வெட்கமற்று பொதுவெளியில் ஆதரிக்கும் பிஜேபியின் ஆபாசஅரசியலின் விளைவு இது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் ஜோதிமணி எம்.பி.
பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்களை தரந்தாழ்ந்து விமர்சிப்பதன் மூலம் அவர்களை மீண்டும் அடுப்பங்கரைக்கே அனுப்பிவிட நினைக்கும் இதுபோன்ற கீழ்த்தரமான சிந்தனைகளுக்கு எதிராக கட்சி சார்பற்று ஆண்களும்,பெண்களும் தங்களது கடும் கண்டனத்தை பதிவுசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர்.
அனைத்து சாதியினரும் தாங்கள் நம்பும் கடவுளை நெருங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை பெரும்பான்மை இந்துக்களுக்காக தலைவர் கலைஞர் கொண்டு வந்தார். அனைத்து இந்துக்களின் பாதுகாவலன் என்று கூறும் பிஜேபி பெரும்பான்மை இந்துக்களின்..விருப்பத்தை நிறைவேற்ற குரல் கொடுக்குமா ? என்று கனிமொழி கடந்த 28ம்தேதி அன்று டுவிட்டரில் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, மறுநாள் 29 தேதி அன்று, ‘’கண்டவனும் நுழைய கோவில் கருவறை என்ன கனிமொழியின் பெட்ரூமா?’’ என்று தமிழக பாஜகவின் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியின் நிர்வாக இயக்குநர் கோபிகிருஷ்ணன், தனது டுவிட்டர் பக்கத்தில், பதில் அளித்திருந்தார்.
கோபிகிருஷ்ணனின் இந்த பதிவு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்புவே இந்த பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்
தர்மபுரி திமுக எம்.பி. செந்தில்குமார், கோபிகிருஷ்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். திருநெல்வேலி போலீசிலும் கோபிகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பெண் கேள்வி எழுப்பினால் அசிங்கமாக பதில் சொல்வதில் ஆணாதிக்க மநு வெளிப்படுகிறார். கோயில் கருவறை படுக்கைஅறை இல்லைதான். அதுபோல அது பிராமணர்களின் தனி அறையும் இல்லை. உரிய பயிற்சி பெற்ற அனைத்து இந்துக்களுக்கும் உரியது. இதை ஏற்காத பாஜக இந்துவிரோத கட்சி என்றுகடுமையாக விமர்சித்தார் முத்த அரசியல் விமர்சகர் அருணன்.
இந்நிலையில், காங்கிரஸ் கரூர் எம்.பி. ஜோதிமணி, கனிமொழி எம்.பியையை தரம்தாழ்ந்து விமர்சித்துள்ள பிஜேபியின் கோபாலகிருஷ்ணன் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பெண்களை அறிவுசார்நது அணுகாமல் படுக்கையறையோடு மட்டுமே தொடர்புபடுத்தி பார்க்கும் இழிபிறவிகளை வெட்கமற்று பொதுவெளியில் ஆதரிக்கும் பிஜேபியின் ஆபாசஅரசியலின் விளைவு இது. பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்களை தரந்தாழ்ந்து விமர்சிப்பதன் மூலம் அவர்களை மீண்டும் அடுப்பங்கரைக்கே அனுப்பிவிட நினைக்கும் இதுபோன்ற கீழ்த்தரமான சிந்தனைகளுக்கு எதிராக கட்சி சார்பற்று ஆண்களும்,பெண்களும் தங்களது கடும் கண்டனத்தை பதிவுசெய்ய வேண்டும் என்கிறார்.
நாளையவரலாறு செய்திக்காக,
-ஹனீப் தொண்டாமுத்தூர்.
Comments