முதல்வர் கோவை வரும்தேதியில் மாற்றம் !!
தமிழக முதல்வர் கோவையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஏற்கனவே தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பிரச்சார தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பில் முதல் நாள் பிரச்சாரம் 22ஆம் தேதி எனவும், இரண்டாம் நாள் பிரச்சாரம் 23ஆம் தேதி எனவும் நிகழ்ச்சி நிரல்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடக்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தினால் கோவை வருகை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முதல் நாள் பிரச்சாரம் 23ஆம் தேதியும் இரண்டாம் நாள் பிரச்சாரம் 24ஆம் தேதியும் நடைபெறுமென அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், தொண்டாமுத்தூர்.
Comments