தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.!-குழந்தைகளுக்கு தவறாமல் கொடுங்கள்..!
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. இதில் ஐந்து வயதுக்கு உள்பட் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் எங்கு வேண்டுமானாலும் சென்று உங்கள் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்தை தவறாமல் கொடுங்கள். போலியோ நோயை ஒழிக்க முக்கியமானது இந்த சொட்டு மருந்து.
தமிழகம் முழுவதும் இன்று 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்கள், நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மையங்களில் 5 வயதுக்குட்பட்ட 70.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-செந்தில் முருகன் சென்னை.
Comments