கண்டமான ஆட்டுத் தொட்டி சாலை வாகன ஓட்டிகள் அவதி...!!

 

-MMH 

கோவை மாவட்டம் போத்தனூர் பஞ்சாயத்து ஆபீஸ் ஆட்டுத் தொட்டி ரோடு மக்கள் வாகனத்திலும் நடை பயணமாகவும் செல்ல முடியாத நிலையில் காணப்படுவதால்,

வாகன ஓட்டிகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் இந்த சாலையை வயதானவர்களும் பெண்களும் குழந்தைகளும் அதிக அளவில் பயன்படுத்திவந்த நிலையில், நேற்றைய தினம் பெய்த மழையினால் சாலை முழுவதும் கண்டமான நிலை காணப்படுகிறது.

வாகன ஓட்டி ஒருவர் கீழே விழும் நிலையும் காணப்படுகிறது இதைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த சாலையை சரி செய்து தருமாறு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும், கோரிக்கை வைத்துள்ளார்.

-ஈஷா கோவை. 

Comments