தேவகோட்டை அருகே கண்மாயில் மூழ்கி 3 பேர் பரிதாப சாவு!!
திண்டுக்கல் மாவட்டம், கோம்பையைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பூங்குடியில் தங்கி சீமைக்கருவேல மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை அக்குடும்பத்தைச் சேர்ந்த புவனசின்னு மகள் புனிதா (12), மகன் யோகேஸ்வரன் (8), பழனிச்சாமி மகன் இன்பதமிழன் (9) ஆகியோர் அங்குள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற 3 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
அவர்களின் உடல்களை கிராமத்தினர் உதவியோடு உறவினர்கள் மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக திருவேகம்பத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
சம்பவம் நடந்த கண்மாயில், விதிகளை மீறி சுமார் 12 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டு உள்ளது. உடனடியாக அரசு தலையிட்டு அதைச் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். மூன்று உயிர்களை உயிர்களை பலி கொடுத்துள்ள தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு தரவேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
- சங்கர், தேவகோட்டை.
Comments