கோவை அருகே பையில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தையால் பரபரப்பு..!!
கோவை மாவட்டம் நீலாம்பூர் தென்னம்பாளையம் பைபாஸ் சாலையோரத்தில் பை ஒன்றில் பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று துணியினால் சுற்றப்பட்டு பைக்குள் பிணமாக கிடந்த நிலையில் காணப்பட்டது.
அங்கே சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த குழந்தையின் கை பகுதியில் இருந்த அடையாள அட்டையில் தாயார் பெயர் அசினா என்றும் 3 கிலோ 200 கிராம் எடை கொண்ட குழந்தை என்றும் 24ஆம் தேதி பிறந்த குழந்தை என்றும் தெரிய வந்தது.
பின்பு ஆம்புலன்ஸ்ண வரவழைத்து கோவை மருத்துவமனைக்கு அந்த குழந்தையின் சடலத்தை எடுத்துச் சென்ற போலீஸார் மேற்படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-ஈசா,ராஜேஷ்.
Comments