பல்லடம் அரசு பள்ளி அழகானது! கல்வியாண்டை வரவேற்க ரெடி!!!
பல்லடம் அரசு ஆண்கள் பள்ளி, புதுப்பொலிவுடன், கல்வியாண்டை வரவேற்க ஆயத்தமாகி வருகிறது.பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 600க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பல்வேறு காரணங்களால் பள்ளியில் மாணவர் சேர்க்கை சரிந்தது. பள்ளியில் மீண்டும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பி.டி.ஏ., உடன் தன்னார்வலர்கள் கை கோர்த்தனர். அவ்வகையில், பள்ளி கட்டடத்தை புதுப்பொலிவாக்கி வருகின்றனர்.
இது குறித்து, பி.டி.ஏ., நிர்வாகிகள் கூறியதாவது:பல்லடம் அரசு பள்ளியில் படித்த பலர், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் என நல்ல நிலையில் உள்ளனர். அவர்களை இணைத்து, ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன், பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. தனியார் பள்ளிக்கு நிகராக, உட்கட்டமைப்பு பொலிவூட்டப்பட்டுள்ளது.
சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்கில், பள்ளி வளாகத்தில், 500க்கும் மேற்பட்ட மரக்கன்று நடப்பட்டு, சொட்டு நீர் பாசனத்துடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என, அனைத்திலும் சிறந்து விளங்கும் வகையில், மாணவர்களை தயார்படுத்துவது, வரும் கல்வியாண்டில் புதுமையான சூழலுடன் மாணவர்களை வரவேற்பது என, முடிவுகளை எடுத்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்
நாளையவரலாறு செய்திக்காக,
-முஹம்மதுஹனீப் திருப்பூர்.
Comments