குண்டடம் பகுதியில் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது..

 

-MMH

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும், குண்டடம் ஒன்றியம் கொக்கம்பாளையம், மற்றும் நந்தவனம் பாளையம் ஊராட்சியை சேர்ந்த சுமார் 265 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.ஹேமலதா அவர்கள், சார் ஆட்சியர் திரு.பவன் குமார் அவர்கள், 

தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காளிமுத்து அவர்கள், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் சைலஜா  இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர். இந் நிகழ்ச்சி மேட்டுக்கடை தனியார்  மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.C.மகேந்திரன் M.A., அவர்கள், கலந்துகொண்டு அரசு சார்பில் இலவச பட்டா  வழங்கும்  விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

-B.துல்கர்னி உடுமலை.

Comments