நெசவுத் தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்க துணை முதல்வரிடம் கோரிக்கை!!

     -MMH

     கம்பம்: தேனி மாவட்ட நெசவுத் தொழிலாளா்களுக்கு, இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று போடியில் உள்ள அலுவலகத்தில், துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நெசவுத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறியிப்பதாவது: ஆதாருக்கு இணையான நெசவாளா் அட்டை வழங்க வேண்டும். நெசவாளா்களுக்கு என கூட்டுறவு வங்கி ஏற்படுத்த வேண்டும்.

நெசவு தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். நெசவுத் தொழில் பற்றி தெரிந்தவா்களை நெசவுப் பணிக்கு அமா்த்த வேண்டும். கைத்தறி, விசைத்தறி தொழில்கள் தடையில்லாமல் இயங்க கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனு அளிக்கும் நிகழ்ச்சியில், மாநிலத் தலைவா் தேவராஜ், பொதுச் செயலாளா் ராஜேந்திரன்,பொருளாளா் எஸ். பி . துரைசாமி, மாநில நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஆா்.கணேசன், ராமசாமி, இளைஞரணி பொதுச் செயலாளா் அன்பழகன், ஒருங்கிணைப்பாளா் எல்.ஆா்.சுப்பிரமணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக், தேனி.

Comments