ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!
சிங்கம்புணரி: ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவிலில் வெள்ளித்தேர் இழுத்து இனிப்பு வழங்கிய மாவட்டச் செயலாளர்!
ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு சிங்கம்புணரியில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற சிவகங்கை மாவட்டச் செயலாளர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். எதிர்வரும் 12.12.2020 அன்று ரஜினிகாந்த் அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவிலில் வெள்ளித்தேர் இழுத்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிங்கம்புணரி ரஜினி மன்ற ஒன்றிய செயலாளர் அழகு பாண்டி, ரஜினி மன்ற மகளிர் அணி ஜோதி மணி, பழனிவேல் மாவட்டச் செயலாளர், ரஜினி மன்ற முன்னாள் தலைவர் செந்தில்நாதன், பி.எப்.சி குழந்தைகள் பாதுகாப்பு இயக்க மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், திருப்பத்தூர் தொகுதி பொறுப்பாளர் செந்தில் குமரன், நகரபொறுப்பாளர் மூர்த்தி ஆர்டிஸ்ட், ET. ராஜன், தேவதாஸ், கே.சுப்ரமணியன் ஒன்றிய பொறுப்பாளர், நகர பொறுப்பாளர் ஜெயராஜ், சேதுபாஸ், மதி, பவுன்ராஜ், எம்.சுந்தரம், கவர்னர் ராஜா, அரனந்தான்குண்டு மூர்த்தி மற்றும் சிங்கம்புணரி ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- பாரூக், சிவகங்கை.
Comments