மீன் முழுவதும் கணவரும் குழந்தைகளும் சாப்பிட்டு விட்டதால் மனைவி தற்கொலை!!

-MMH 

     பீகார்: இரண்டு கிலோ மீன் முழுவதும்  கணவரும்  குழந்தைகளும் சாப்பிட்டு விட்டதால் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பீகார் பாகல்பூரில் நடந்தது. 

குண்டன் மண்டல், அவரது மனைவி  சாரா தேவி (31) நான்கு குழந்தைகளுடன் ஆறு பேர் கொண்ட அந்த குடும்பத்திற்கு குண்டன் மண்டல் இரண்டு கிலோ மீன் வாங்கினார். மனைவி தயாரித்த  குளம்பை கணவர் மற்றும் குழந்தைகள் மதிய உணவிற்கு சாப்பிட்டு விட்டார்கள். இல்லத்தரசி சாரா தேவி சாப்பிட வந்தபோது, ​​ஒரு துளி மீன் கூட மிச்சமில்லை. இது அவருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

மீன் குழம்பு தொடர்பாக குண்டன் மண்டலுக்கும் சாரா தேவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. சண்டையின் போது நாங்கள் சாப்பிட்டு மீதமுள்ளவற்றை சாப்பிட்டால் போதும் என்ற கருத்து அவரது மனைவியை கடுமையான துன்பத்திற்கு  ஆளாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

மீதியை சாப்பிடுங்கள் என்று கூறி குண்டன் வயலுக்குச் சென்றார். இதற்குப் பிறகு, சாரா தேவி விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது . மரணத்திற்கு போராடி கொண்டிருந்த சாராதேவியை குண்டன் வயலில் இருந்து வந்து  மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.                                                                                                              

ஆனால் மீன் குளம்பு  தகராறு தனது மனைவியை மிகவும் வருத்தப்படுத்தும் என்று தான் நினைக்கவில்லை என்று அவர் பதிலளித்தார். இதற்கு முன்பு தனது மனைவி தற்கொலைமுயற்சி எதுவும் எடுக்கவில்லை என்று குண்டன் போலீசாரிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

-நம்ம ஒற்றன்.

Comments