இயற்கை விவசாயி 'நம்மாழ்வார்' நினைவு தினம்!! - மாலை அணிவித்து மக்கள் மகிழ்ச்சி..!!
மன்னார்குடி: இயற்கை விவசாயி நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி மன்னார்குடி வணிகர் நல சங்கம் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து விளக்கேற்றி மரியாதை செலுத்தினார்கள்.
இதில் அச்சங்கத்தின் தலைவர் செயலாளர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மன்னார்குடி வணிகர் நலச்சங்க தலைவர் திரு பாரதி அவர்கள் பேசும் போது, இன்று டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டம், உணவு உற்பத்தி செய்யும் வர்க்கத்தின் போராட்டம் அல்ல உணவு உட்கொள்ளும் ஒவ்வொரு மனிதனின் போராட்டம். இந்திய மக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அதற்கு தான் சார்ந்து இருக்கக்கூடிய வணிகர் நல சங்கம் முழுமையாக ஒத்துழைக்கும் என்றும் உறுதியளித்தார். அனைவரும் இயற்கை உணவு பழக்க வழக்கத்திற்கு மாற வேண்டும் ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டும் நல்ல சந்ததிகளை தலைமுறைகளை ஆரோக்கியமாக உருவாக்க வேண்டும் இது ஒவ்வொரு இந்திய குடிமகன்களின் மற்றும் ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை என்று தெரிவித்தார்.
-கிரி,ஈசா,ரைட் ரபிக்.
Comments