காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை திருடி விற்ற பெண் போலீஸ் கைது!!

 

-MMH

ஊருல எங்கே திருடு போனாலும் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். காவல் நிலையத்திலேயே திருடுபோனா, யாருகிட்ட போய் புகார் கொடுப்பாங்க? இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை காவல் துறைக்கு எற்படுத்திய கூடங்குளம் பெண் காவலர் கிரேசியா!

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தைச் சேர்ந்தவர் தம்பிதுரை (29). கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வாகன சோதனையின் போது இவரது புது பைக்கை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தியிருந்தனர். தம்பிதுரை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோர்ட்டில் அபராத தொகையை செலுத்தி விட்டு பைக்கை பெறுவதற்காக போலீஸ் நிலையம் வந்துள்ளார்.

அப்போது அங்கு நின்ற பைக் மாயமானது தெரிந்தது. கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, பெண் போலீசான கிரேஸியா (29) துணையுடன் அவரது கணவர் அன்புமணி (33) பைக்கை திருடியது தெரியவந்தது. புரோட்டா மாஸ்டரான அன்புமணியை கிரேஸியா காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர் இரவு பாரா டூட்டியில் இருக்கும்போது அன்புமணியை வரவழைத்து பைக்கை திருடி குறைந்த விலைக்கு விற்றது தெரியவந்தது. இப்படி 10க்கும் மேற்பட்ட புது பைக்குகளை அன்புமணி திருடியது தெரியவந்துள்ளது. 

மேலும் காவல் நிலையத்தில் இருந்த ஒரு மொபைல் போனையும் மற்றும் விசாரணைக் கைதி ஒருவரின் வெள்ளி அரைஞாண் கயிறு ஒன்றையும் கிரேஸியா திருடியுள்ளார். இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று இரு சக்கர வாகனங்களும் ஒரு மொபைல் போன் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார், பெண் காவலர் கிரேஸியா மற்றும் அவரது கணவர் அன்புமணியை கைது செய்து 3 பைக்குகளை மீட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாருக்.

Comments