ஓட்ஸ் உணவில் இருக்கும் நன்மைகள்..!

-MMH

ஓட்ஸ் என்பது உடல் நலத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த முழு தானிய உணவாக விளங்குகிறது. இந்த தானியத்தில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. ஓட்ஸ் வயிற்றில் இருக்கும் கொழுப்பினை கரைக்க பெரிதும் உதவுகின்றது. இதனால் பலர் இதனை காலை உணவில் சேர்த்து கொள்கின்றனர். 

அதிலும் ஒரே ஒரு மாதம் தினமும் ஓட்ஸை காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வதனால் உடலுக்கு பல நன்மைகள் வாரி வழங்கும். அந்தவகையில் ஓட்ஸ் சாப்பிடுவதனால் ஏற்பட கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். ஓட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது. ஓட்ஸில் உள்ள பைட்டோ கெமிக்கலானது ஹார்மோன் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பினை தடுக்கிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வருவதை தடுக்கிறது.

ஓட்ஸ்ல் அதிக அளவு நார்சத்து உள்ளதால் சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.

கெட்ட கொழுப்பு கரைக்கப்படுவதால் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்பட்டு மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மலச்சிக்கல் உண்டாவது தடுக்கப்படுகிறது, மேலும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

ஓட்ஸில் நார்ச்சத்து மற்றும் கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளது. தினந்தோறும் காலை உணவாக ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். ஓட்ஸ் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்கிறது.

ஓட்ஸ் உணவில் இந்த மன அழுத்த நிலையை குறைப்பதற்கான வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. ஓட்ஸ் உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு மற்றும் வயிற்றுவலி காரணமாக பெண்கள் சிலர் உடல்ரீதியாக பலமிழந்து காணப்படுவார்கள். இவர்கள் ஓட்ஸ் மூலம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வர அவர்களின் உடல்சோர்வு நீங்கும். அடிவயிற்று வலியும் குறையும்.

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஓட்ஸ் கொண்டு செய்யபட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்லது. ஓட்ஸில் ட்ரிப்டோபான் எனப்படும் வேதிபொருள் நிறைந்திருக்கிறது. இது நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கங்களை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது.

ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உணவுகளை உடல் மெதுவாக செரிக்க செய்யும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென உயராது. ஓட்ஸில் பீட்டா குளுக்கன் என்கிற வேதி பொருள் மற்ற எந்த ஒரு உணவையும் விட அதிகளவு நிறைந்திருக்கிறது. இந்த பீட்டா குளுக்கன் உடலில் இருக்கும் நிண நீர் சுரப்பிகளை பலப்படுத்தி தொற்று நோய்கள், தொற்று கிருமிகள் மூலம் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகியவற்றிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

-சுரேந்தர்.

Comments