ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி கோவையில் சிறப்பு யாகம்!!
கோவை: நடிகர் ரஜினிகாந்தின் 71 வது பிறந்தநாளை ஒட்டி அவர் நீண்ட ஆயுளை பெற வேண்டி கோவையில் அவரது ரசிகர்கள் சார்பில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் டிசம்பர் 12ஆம் தேதி அவரது ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அவரின் 71வது பிறந்த நாளையொட்டி கோவை தெற்கு மண்டலம் செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி தலைமையில் கோவை சலிவன் வீதியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருக்கோவிலில் ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது. இந்த யாகத்தின் போது ரஜினி நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்று அவரது ரசிகர்களால் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு மண்டலம் செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்தின் வெற்றிக்காக தங்கள் குடும்பம் முழுவதும் சேர்ந்து உழைக்க இருப்பதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், பிரேம் நாத் பிரவீன் குமார், ரவி, செந்தில் குமார், சீனிவாசன் , ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments