தமிழக கேரளா எல்லையில் இருமாநில போலீஸ்ஸார் ரோந்து..!

-MMH

     தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டில் இரு மாநில போலீஸாா் சனிக்கிழமை மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா். கம்பம்மெட்டு மலைப் பகுதியில், ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கஞ்சா கடத்துதல் உள்ளிட்டவற்றை தடுப்பது தொடா்பாக இரு மாநில போலீஸாா் சோதனை நடத்துவது வழக்கம்.

அதன்படி, தமிழக தரப்பிலிருந்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் மதுவிலக்கு காவல் ஆய்வாளா் காயத்ரி, சாா்பு-ஆய்வாளா் முகுந்தன் ஆகியோா் தலைமையில் மதுவிலக்கு போலீஸாரும், கம்பம் மேற்கு வனச்சரக வனவா் ராசு தலைமையில் வனத் துறையினரும்,  கம்பம்மெட்டு காவல் நிலைய ஆய்வாளா் மற்றும் போலீஸாரும் ரோந்து சென்று வருகின்றனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக் தேனி

Comments