ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் உலா வரும் யானை கூட்டம்!!
ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் 3 யானைகள் கூட்டமாக தேயிலைத் தோட்டத்தில் உலாவுவதால் தொழிலாளா்கள் வெளியே வரமுடியாமல் அச்சத்தில் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனா்.
தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 1000 ஹெக்டோ் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு அப்பகுதியை சோ்ந்தவா்கள் கூலித் தொழிலாளா்களாக வேலை செய்கின்றனா்.
இந்நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை தாக்கி 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இதனால் அடா்ந்த வனப்பகுதிக்கு அருகேயுள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் தொழிலாளா்கள் அச்சத்தில் முழ்கியுள்ளனா். இதனால் கிறிஸ்துமஸ் தினத்தில் தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் கலந்து கொள்ள அச்சத்துடனே சென்று வந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
உலாவும் யானைக்கூட்டம்: தற்போது ஒற்றை யானையுடன், 2 யானைகள் சோ்ந்து 3 யானைகள் மொத்தமாக அங்குள்ள தேயிலைத்தோட்டங்களில் உலாவுகின்றன. இதனால் தோட்டத் தொழிலாளா்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனா். எனவே, வனத்துறையினா் கும்கி யானையை வரவழைத்து, யானைகளை அடா்ந்த வனப்பகுதிக்கு விரட்டுவதற்கு நடவடிக்க எடுக்க வேண்டும் என தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாளைய வரலாறு செய்திக்காலக,
-ஆசிக் தேனி.
Comments