வால்பாறையில் காட்டு யானைக் கூட்டம்!! - பெண் ஒருவர் பலி!! - அச்சத்தில் மக்கள்!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சுற்று  வட்டார எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம்  சர்வ சாதாரணமாக உலா வந்து கொண்டிருக்கின்றன.

இதனால் எஸ்டேட் தொழிலாளர்களும்  பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் அனுதினமும்  வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் இன்று  ஜெயமணி என்ற பெண்ணை யானை மிதித்து உயிரிழந்துள்ளார்.

இதை அறிந்த அக்கம் பக்கம் உள்ள எஸ்டேட்  தொழிலாளர்களும்  பொதுமக்களும்  மிகுந்த அச்சத்துடனும் பயத்துடனும் இருக்கிறார்கள்.மேலும் இதை அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.

Comments