தாறுமாறாக ஏறியது சைக்கிளின் விலை! - சங்கடத்தில் சைக்கிள் ஓட்டிகள்..!!

     -MMH 

     சைக்கிள் என்றால் ஒரு காலகட்டத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் காரை போன்று நினைத்து பயன் படுத்தி வந்த காலம் இருந்தது. சைக்கிளை எடுத்து பிள்ளைகளை ஏற்றி வலம் வருவது ஒரு சுகமான சுமையாக கருதி ஆனந்தம் அடைவார் தந்தைகள்.

அப்படி அந்த சைக்கிளை மிதிக்கும் பொழுது அவருடைய உடல் ஆரோக்கியமாகவும் நோய் நொடி இல்லாமலும் வாழ்ந்து வந்தார்கள்கள். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம்  சொகுசான முறையில் பயணிப்பதால் ஏற்படும் விளைவுகள் எண்ணிலடங்காதவை.

அப்படிப்பட்ட சைக்கிள் அன்று 150 ரூபாய் மட்டும்தான் இன்று ஒரு டிவிஎஸ் என்ற இரு சக்கர வாகனம்  வாங்குவதென்றால் 75 ஆயிரம் வரை செலவிட வேண்டியிருக்கிறது. இருப்பினும் சைக்கிள் என்ற ஒரு எளிய வாகனம் நம்மில் இன்று குழந்தைகள் முதல் அனைவரும் பயன்பெற்று வகையில் இருப்பினும் விலையோ தலை சுற்றி வருகிறது.

ஒரு சைக்கிளின் விலை ஐந்தாயிரம் முதல் 50,000 வரை இருக்கிறது. இன்னும் எடுத்துக்கொண்டால் 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கூட சைக்கிள் என்ற ஒரு எளிய வாகனம் இன்று கவர்ச்சிகரமாக  வந்து தான் இருக்கிறது. அன்று வயிற்றை நிரப்புவதற்காக சைக்கிள் ஓட்டினோம் இன்று வயிற்றை குறைப்பதற்காக சைக்கிள் ஓட்டுகிறோம். எது எப்படி இருந்தாலும் சைக்கிள் ஒரு எளிய வாகனம் தான் என்று ஏற்றுக்கொள்கிறார்கள் மக்கள்.

-ஈஷா,கோவை.

Comments

M.Aflal said…
😱😱😨😲