ராட்சத அலையில் சிக்கிய சிறுமியை காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு!!

     -MMH

    சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி கடலில் surfing சறுக்கு விளையாட்டு ஆடி கொண்டிருந்தார். அப்போது கடல் அலையின் சீற்றத்தின் காரணமாக ராட்சத அலையில் அவர் சிக்கிக் கொண்டார்.

உடனே சிறுமியின் தந்தை பாலாஜி (55 வயது) கடலில் இறங்கியுள்ளார். அப்போது அவர் கடலில் சிக்கி மாயமான நிலையில், திருவான்மியூர், வால்மீகி நகர், சீ வார்டு பீச் ரோட்டில் அவரது சடலம் இன்று கரை ஒதுங்கியது பெசன்ட் நகரை சேர்ந்த அவர், ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

திருவான்மியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

-சுரேந்தர்.

Comments