மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்..!!

      -MMH 
     மன்னார்குடி: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மன்னார்குடி பகுதி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் சேதமடைந்த காலணி வீடுகளை புதிதாக கட்டி தர சொல்லி கோரியும் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சரி செய்ய கோரியும். விவசாயிகளின் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க கோரியும் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் சார்பில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் செய்தனர். 

-கிரி, ஈசா, ரைட் ரபீக்.

Comments